பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

sia siouë stëzaosssit

கடவுளிடம் அச்சம் கொள்வதே அறிவு பெறுவதின் தொடக்கம். கடவுளை அறிவதே அறிய வேண்டிய அறிவு. «TT

அறியவில்லை என்று அறிபவனே அறிவு உடை யவன். - 6T

அறிவு அம்மையின் வழிகள் இன்பம் தருவன. அமைதி அளிப்பன, அவளைக் காண்பவனே அருள் பெற் றவன். 6T

கடவுள் காட்டும் நெறியில் நிற்பதே அறிவு தியநெறி விட்டு விலகுவதே அறிவு. GT

அறிவு அம்மையின் கையைச் சிக்கெனப் பிடித்துக் கொள், அவளே உன் உயிர். GT

உன்னை அறிந்து கொள்வதே உச்சமான அறிவு. எ இல்லதென் அறிவு பெற்றால்? உள்ளதென அறிவு இன்றேல்? GT

உங்களில் அறிவுடையோர் எவர்? அறிவோடு சேர்ந்து அன்பைக் கொண்டு அறச் செயல்கள் செய்து அறி வுடையோர் என்று காட்டட்டும். கி

அறிந்துவிட்டதாகச் சொல்பவன் அறிந்தவனல்லன். அறிந்தவனை அனைவரும் அறிவர். பெள அறிவைத் தாயாகவும்,திருப்தியைத் தந்தையாகவும், உண்மையை உடன்பிறந்தான்கவும் கொள்க. அதுவே சிறந்தது. பெள

அன்பு ஈசன் எனக்கருதி எல்லா உயிர்களையும் நேசத்தால் நினைத்து கொள். - ஒளவையார்