பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Yor

Yor

• Yor

ੋਂ

சர்வ சமயச் சிந்தனைகள்

அன்பு செய்ய விரும்பாதவன் அறிவு பெறுவது எப்படி? அன்பு செய்யக்கூடிய போது செய்யா திருப்பதே அறிவின்மை யாகும். அன்பும் அறிவும் இல்லாதவன் அடிமையே. ද්% நீ அன்பு செய்தும் பிறர் அன்பு செய்யாவிட்டால் உன்னுடைய அன்பை ஆய்ந்து பார், நீ மரியாதை செய்தும் பிறர் மரியாதை செய்யாவிட்டால் உன் னுடைய மரியாதையை ஆய்ந்துபார். & வாழ்நாள் முழுவதும் மறக்காதிருக்க வேண்டிய அறவிதி எது? பிறரிடம் அன்பாக நடந்து கொள், பிறர் உனக்கு எதைச் செய்யாதிருக்க வேண்டும் என்று எண்ணுகி றாயோ அதை அவர்க்குச் செய்யாதிரு என்பதே. &$ அன்பு கொள்வதே மக்கள் இனத்தின் சிறப்பியல் பாகும். - &S அன்புடையோர்க்குப் பகைவர் இலர்.

நெஞ்சில் அன்பு இல்லாதவன் - அவன் கிரியைகள்

செய்வதால் யாது பயன்? &5

அன்பு செய்யாமையினும் பெரிய தீமை உலகில் கிடையாது. &S நல்லவனோ தீயவனோ யாரிடத்தும் அன்பாயிரு, தீயவழியினின்று விலக்குவதே தீயவனுக்குச் செய்யும் அன்பாகும். இ தனக்குச் சகல துணைவலியும் பொருள்வலியும் இருந்தும் தனக்குச் தீமை புரிந்தவரைப் பொறுத்துக் கொள்ளுகிற உயர்குண முடையவர்கள் நம் நாய கனிடம் நலம் பெறுவார்கள். இ கடினமான இதயத்தை உடையவன் கடவுளிடமிருந்து நீண்ட தூரம் அகன்றவனாவான். இ