பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 37

அன்பு செய்வதை நிறுத்தாதே, அயலாராயினும் விருந்தோம்ப மறக்காதே, தேவதூதர்களைக்கூட இவ் வாறு அறியாமலே உபசரிக்கக்கூடும். கி உங்களிடையே அன்பு நிலவட்டும், அன்பு செய்தல் அநேக பாவங்களுக்குப் பரிகாரமாய் விடும். கி அன்பு இல்லாமல் அறவுரைகள் கூறுவது வெறும் செகண்டி அடிப்பதே. வருவதை உரைக்கவும் மலை களை அகற்றவும் கூடிய ஆற்றல் இருப்பினும் அன் பில்லையானால் யாதொரு பயனும் உண்டாகாது. கி நான் என் செல்வம் முழுவதையும் கொண்டு ஏழைகளுக்கு அன்னமிட்டாலும், அவர்களுக்காக என் உடலையே அர்ப்பணித்தாலும், அன்பில்லையானால் யாதொரு பயனும் உண்டாகாது. கி

அறங்கள் அனைத்தினும் அன்பே உயர்ந்தது. கி உலகம் தோன்றின நாள் முதல் நாம் கேட்டுவரும்

உபதேசம் இது! பரசுபரம் அன்பு செய்யுங்கள் என்பதே. கி

கடவுளை நேசிப்பவன் சகோதரனையும் நேசிப்பான் என்று கடவுளே அருளியிருக்கிறார். கி நான் சுதந்திரம் உடையேன், ஆயினும் அனைவர்க்கும் ஊழியனாக இருந்து வருகின்றேன். கி எந்த மனிதனையும் இழிந்தவன் என்று கூறலாகாது என்று எனக்குக் கடவுள் காட்டியுள்ளார். - கி சகோதரரிடம் அன்பு செய்வதால் நாம் மரணத்திலிருந்து வாழ்வுக்குச் சென்றுவிட்டோம். கி

ஆசை - ஆசையுடையவன் நெஞ்சு வறியது, ஆசைப்படாமை அதை நிறைத்துவிடும். ᏭᏋ