பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த கோவேந்தன் 41

நீத்த நெறியானை நீங்காத் தவத்தான்ை நாத்த நெறியானை நலலூர்ப் பெருமானைக் காத்த நெறியானைக் கைகூப் பித்தொழுது ஏத்தும் அடியார்கட் கில்லை யிடர் தான்ே.

- திருஞானசம்ந்தர்

கொடுத்தேனே யென்னைக் கொடுத்தவுடன் இன்பம் மடுத்தேனே நீடுழி வாழ்ந்தே - அடுத்தேனே பெற்றேனே பெற்றுப் பிழைத்தேனே சன்மவல்லல் இற்றேனே. ஏழை அடியேன். - தாயுமானவர்

பையார் அரவே ரல்கு லாளொடும் செய்யார் செம்பொன் பள்ளி மேவிய கையார் சூல மேந்து கடவுளை மெய்யால வணங்க மேவா வினைகளே, தாமென்றும் மனந்தளராத் தகுதியராய் உலகத்துக் காமென்று சரண்புகுந்தரர் தமைக்காக்குங்

கருணையினான் ஒமென்று மறைபயில்வார் பிரமபுரத் துறைகின்ற காமன்றன் உடலெரியக் கனல் சேர்ந்த கண்ணானே.

- திருஞானசம்பந்தர்

கடவுளைத் தம்மிடத்தில் காணும் அறிஞரே அழியா இன்பத்தை அடைவர், ஏனையோர் அடையார்.

உபநிடதம்

புறப் பொருள்களில் பற்று இல்லாமல் அகத்திலேயே இன்பத்தைக் காண்பவனே அழியாத இன்பம்

அடைவான. பெள

ஆசைகள் வழியே செல்பவன் இன்பம் அடையான், பரகதி எய்தான்். - பகவத்கீதை