பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

சர்வ சமயச் சிந்தனைகள்

உடல்

உனக்கு உடல் தந்திருப்பது உன்னுடைய நன்மைக் காக மட்டுமன்று. , 6T

உண்மை

உள்ளத்தில் உண்மை யில்லாதவன் ஒன்றுக்கும் உதவான். எந்த வண்டியேனும் அச்சாணி யில்லாமல் ஒட முடியுமோ? &

உள்ளத்தில் உண்மை உடையவனே பிறரை நல்வழிப் படுத்தமுடியும். ද් உள்ளத்தில் உண்மை உடையவன் எவன்? ஒழுக்க நெறியைத் தேர்ந்து உறுதியாய் நிற்பவனே.

உண்மையை அறிபவன் உண்மையைக் காதலிப்ப வனுக்குச் சமமாகான். és

சான்றோருடைய குறிக்கோள் உண்மையே, உண வன்று, உண்மையைக் காணாமற் போவோமோ என்று கவலைப்படுவர், வறுமை வந்துவிடுமோ என்று கவலைப்படார். る

உள்ளதை உள்ளபடி உரையாத தெல்லாம் தவறாக உரைத்ததே. இந்தத் தீயொழுக்கத்தை விடாதவன் இருளுலகம் புகுவான். தா உண்மை இல்லாமல் சொல்வதெல்லாம் தவறாகச் சொல்வதே. தா உண்மை நெறியில் நிற்க விரும்புவோர் ஊனக் கண் களை மூடிக்கொண்டு ஞானக் கண்களைத் திறத்தல் வேண்டும்.

ஆசைகளைத் துறந்து கோபத்தை விட்டவரே உண்மை நெறியைக் காண்பார். சி