பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகத்தில் எந்த ஒரு சமயமும் ஒத்துப் போவதில்லை. அங்கும் இங்கும் முரண்பாடுகள் இருந்துதான்் வருகின்றன. ஆனால் சமயத்தை எண்ணாத சமுதாயச் சீர்திருத்த முன்னோடிகள் ஒரே உண்மையை வெவ்வேறு மொழிகளில், வெவ்வேறு பாங்கில் கூறினார்கள்.

தலைக்காவேரியும் கங்கையின் மூல ஊற்றும் தோன்றிய இடத்திலிருந்து பல்வேறு வழிகளில் பலவேறு நிலங்களில் பாய்ந்து இறுதியில் ஒரே கடலில் கூடுகின்றன அல்லது ஒன்றுகின்றன. அதைப் போலவே உலகில் எக்காலத்தில் எம்மொழியில் மூல முதல்வர்கள் தோன்றினாலும் அவர்களின் அறநோக்கம் ஒன்றே பொருள் நோக்கம் ஒன்றே இன்ப நோக்கமும் ஒன்றே. நாட்டுக்கு நாடு பசுவின் இனங்கள் வேறுபட்டாலும் பாலின்பண்பும் பயனும் ஒன்றாதல் போல சர்வ சமயச் சிந்தனைகள் பெயரில் வேறுபட்டாலும் இரண்டு தண்டவாளங்களைப் போல இணையாமல் நீண்டாலும் மானுட வாழ்க்கை என்ற தொடர் வண்டி எவ்வெவர் எவ்வெவ் ஊர்க்குச் செல்லவேண்டுமோ அவ்வவ் ஊரில் இறக்கிவிட்டு - இறுதியான ஊர்க்கும்