பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

3.

சர்வ சமயச் சிந்தனைகள்

உண்மை வந்ததும் பொய் மறைந்துவிட்டது. ஆம் பொய் அழிவதே. இ

வாக்குறுதியைக் காப்பாற்றாதவனிடம் மத விசுவாசம்

என்பது கிடையாது. இ

உண்மையை ஒத்த பக்தி கிடையாது, பொய்யை ஒத்த பாவமில்லை, உண்மை தங்குமிடமே உத்தமன் தங்குமிடம். பெள

வாயால் புகழ்வதால் தேவலோகம் போகமுடியாது, உண்மையாக நடந்தால்தான்் விடுதலை ఇup3ష్ణో

ᎥᏞᎫ pH உண்மை என்னும் அரசன் அமைதியாய் உறங்கு வான்: பொய் என்னும் திருடன் வெளியில் அலை வான். அரசன் விழித்து அவனைப் பிடித்துத் தண்டிப் பான். பெள

உலகம்

உலக விவகாரத்தில் அதிகமாக ஈடுபடுபவன் ஆன்

மாவை அழிப்பவன். ஜா

எளிய வாழ்க்கை எளிய வாழ்க்கையே இதயத்தைத் தூய்ம்ை செய்யும் ஆன்மாவைப் பாதுகாக்கும், அறநெறியில் நிற்க உதவும். தா எளிய வாழ்க்கை வாழ்பவன் எல்லோர்க்கும் உப யோகமாக இருப்பான். அவனைப் பார்த்து அயலாரும் அவ்விதம் வாழ்வர். தா

ஏழைகள் விருந்து விழா நடத்தும்போது ஏழைகள், கூனர், குருடர், செவிடர் ஆகியோரையும் அழைத்துக்கொள், நீ அருள் பெறுவாய், அவர் கைம்மாறு செய்ய முடியாது ஆதலின். கி