பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 51

ஒழுக்கம் தன்னிடத்திலுள்ள தீயொழுக்கத்தை அறிந்து அதை

விட்டு அகல்பவனே முன்னேற்றம் அடைபவன்.

பெள

உள்ளத்தை அடக்குவது கடினம், அது ஒடித் திரியும்

இயல்புடையது. ஆனால் அதை அடக்கி ஆள்பவனே ஆனந்தம் அடைவான். பெள

தன்னை அடக்குகிறவனே தளபதிகளுள் தலை சிறந்த வன். பிறரை வெல்வதினும் தன்னை வெல்வதே சால நன்மை தருவது. - பெள

உள்பொருள் இதுவென உணர்தல் ஞானமாம் தெள்ளிதின் அப்பொருள் தெளிதல் காட்சியாம் விள்ளற இருமையும் விளங்க்த் தன்னுளே ஒள்ளிதில் தரித்தலை ஒழுக்கம் என்பதே.

-சிந்தாமணி உதிர்ந்த மலர் மரத்தில் போய்த் தங்காது, உடைந்த கண்ணாடி உருவம் காட்டாது. கி

&SL-6ts; ID

பிறர் கடமையை நன்கு செய்வதினும் தன்கடமையை அரைகுறையாகச் செய்யினும் பாதகமில்லை, அதுவே நல்லது. - வேதம்

கடமையைச் செய்பவனே பூரணம் அடைகின்றான்.

- பகவத்கீதை

கடனென்ப'நல்லவை யெல்லாம் கடனறிந்து

சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. - வள்ளுவர்

வெற்றியை விட்டுக் கடமையையே முதன்மையாகக்

கொண்டால், அது சால்பு தருமன்றோ? பெள