பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 53

女 *

உள்ளத்தைத் தூயதாக வைத்துக் கொண்டால் அதுவே

கடவுள். பெள ஏதேனும் ஒரு கடவுளை ஏத்தினாலும் எல்லாக் கட்வுளரும் ஏற்றுக் கொள்வர். பெள

கடவுளைச் சிறிய இலையிலும் பசிய புல்லிலுங் கூடக் காணலாம். பெள எல்லோரும் என் ஆற்றலை அறிவர். ஆனால் என் ஆற்றல் நான் அடியாரிடமிருந்து பெற்றதே. பெள இதயமே கடவுள் கோவில், அதனால் இதயத்தைப் பாழ் செய்யாதே. பெள கண்ணுக்குப் புலப்படாத கடவுளை உள்ளத்தில் உண்மையுடைய பெரியோரிடம் காணலாம். பெள கடவுளை நாம் காணமுடியாது, ஆனால் நம் செயல் நல்லதா, தீயதா என்பதைக் கடவுள் காண்டார். பெள சிறந்த போதகர் இருதயம், சிறந்த ஆசிரியர் காலம், சிறந்த நூல் உலகம், சிறந்த நண்பர் கடவுள். GT கடவுளே நான் சொர்க்கம் புகுந்தால் அங்கு நீ உள்ளாய், நான் நரகம் புகுந்தால் நீ அங்கும் உள்ளாய்.

- 6了

உன்னிடம் கடவுள் கேட்பது யாது! நீதியாக நடத்தல், கருணை காட்டுதல், அறத்துடன் ஒழுகுதல் - இம் மூன்றுமே. ଗT மனிதன் இன்பம் உண்டாகும்போது கடவுளைப் போற்றுவதுபோலவே துன்பம் உண்டாகும் போதும் போற்றக் கடவன். 6T மக்கள் முன் நாண வேண்டாதவன் கடவுள் முன் அஞ்ச வேண்டியதில்லை. 6T செல்வன் கடவுளைத் தன் பணப்பையில் வைத்திருக் கிறான். ஏழை தன் மனத்தில் வைத்திருக்கிறான். GT