பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 57

இருந்தாலும் இந்த வாயில் எதுவழிபோனாலும் இறை வனைக் கண்டு விடலாம். உடம்பு கொண்ட கடமைகளை எல்லாம் செய். ஆனால் உன் உள்ளம் மட்டும் கடவுளிடம் வைப் பாய். உலகத்தை நேசிப்பதை விட்டவரே கடவுளுக்குப் பணி செய்ய முடியும். ஆயிரக்கணக்கான மக்கள் ஆண்டவனைத் தேடு கின்றனர். தங்கள் இதயத்திலேயே அவனைத் தரிசிக் கின்றனர். - கடவுளைத் தியானிப்பவர் விடுதலை பெறுவர். அவருக்கு எம பாசம் கிடையாது. கடவுளை அடைவதற்குரிய வழிகள் பலவல்ல, ஒன்றே அது அன்பே. கடவுள் வழியிலன்றித் தன் வழியிலேயே நடப்பவர் யாரும் கடவுளைக் கண்டதில்லை. கடவுள் இதயத்தில் இருக்கும்போது காட்டில் போய் தேடுவது ஏன்? வென்றுளே புலன்களைந்தார் மெய்யுணர் உள்ளந்

தோறும் சென்றுளே அமுத மூற்றும் திருவருள் போற்றி.

-பரஞ்சோதி முனிவர் இன்பம்பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும் - துன்பம் தொடர்வறுத்துச் சோதியாய் அன்பமைத்துச் சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே ஊராகக் கொண்டான் உவந்து. -மாணிக்கவாசகர்

தேடிக் கண்டு கொண்டேன் திருமாலொடு நான்முகனும் தேடித் தேடொனாத் தேவனை என்னுளே - தேடிக் கண்டு கொண்டேன். -திருநாவுக்கரசர்