பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

சர்வ சமயச் சிந்தனைகள்

ஆவ லன்புடை யார்தம் மனத்தன்றி மேவ லன், விரை சூழ்துவ ராபதிக் காவ லன், கன்று மேய்த்து விளையாடும் கோவ லன்வரில் கூடிடு கூடலே. -ஆண்டாள்

நன்றி ருந்து யோக நீதி நண்ணு வார்கள் சிந்தையுட் சென்றி ருந்து தீவினைகள் தீர்த்த தேவ தேவனே! குன்றி ருந்து மாட நீடு பாட் கத்து முரகத்தும் நின்றி ருந்து வெஃக ணைக்கிடந்த தென்ன நீர்மையே? -திருமழிசைப்பிரான்

இறையாய் நிலனாகி எண்டிசையுந் தான்ாய் மறையாய் மறைப் பொருளாய் வானாய்விறைவாய்ந்த வெள்ளத் தருவி விளங் கொலிநீர் வேங்கடத்தான்் உள்ளத்தின் உள்ளே உளன். -பேயாழ்வார்

சொல்லிலுஞ் சொல்லின் முடிவிலும் வேதச்

சுருதியிலும் அல்லினு மாசற்ற ஆகாயந் தன்னிலு மாய்ந்து

விட்டோர் இல்லிலு மன்ப ரிடத்திலு மீச னிருக்கு மிடங் கல்லினுஞ் செம்பிலு மோவிருப் பானெங்கள் கண்ணுதலே

-பட்டினத்தார் எங்கே கருணை இயற்கையி லுள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே யாரே யென்னினு மிரங்குகின்றார்க்குச் சீரே யளிக்குஞ் சிதம்பர சிவமே. இராமலிங்கர்

பொய்யா நாவதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே மெய்யே நின்றெரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான் செய்யா னுங்கரிய நிறத்தான்ும் தெரிவரியான் மையார் கண்ணியொடு மகிழ்வான் கழிப்பாலையாதே. ஒ,