பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 59

மெய்யனை மெய்யின் நின்றுணர்வானை மெய்யிலாதவர் தங்களுக் கெல்லாம் பொய்யனைப் புரம் முன் றெரித்தான்ைப்

புனிதனைப் புலித் தோலுடை யானைச் செய்யனை வெளிய திருநீற்றில் திகழும்

மேனியன் மான்மறி யேந்தும் மைகொள் கண்டனை வாழ்கொளிர் புத்துர்

மாணிக்கத்தை மறந்தேன் நினைக்கேனே.

-சுந்தரர்

கடவுள் நாமத்தை இதயத்தில் சேமித்துவை, அச் செல்வத்தைத் திருடர் அணுகார், நெருப்பு எரிக்காது, காற்று அசைக்காது. பெள

இதயத்தின் உள்ளே ஒடு, ஆம் இதயத்தின் இதயத்தில், அங்குதான்் அவன் உளன். பெள

அனைத்திலும் ஒன்றையே காண்க. இரண்டாவதை எண்ணுவதே உன்னை ஏமாற்றுவதாகும். பெள

எவர் இன்ப துன்பங்களைச் சமமாகப் பாவிக்கிறார் களோ அவரே இறைவனைக் காண்பவர். பெள

கடவுள் எப்போதும் அறவோர் இதயத்தில் உறை கின்றான். - பெள அறிவுள்ள யிடத்தில் அறமுண்டு, பொய்யுள்ள யிடத்தில் பாவமுண்டு, ஆசையுள்ளயிடத்தில் மரண முண்டு, மன்னித்தல் உள்ள யிடத்தில் கடவுள் இருக் கிறார். பெள கடவுளின் திருக்கோயிலை மாசுபடுத்துபவன் அழிக் கப்படுவான். கடவுளின் கோயில் புனிதமானது. நீயே கடவுளின் கோயில். கி

என் பெயரால் இரண்டு மூன்றுபேர் கூடியுள்ள இடத்தில் நான் அவர்கள் மத்தியில் இருப்பேன். கி