பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 60

சர்வ சமயச் சிந்தனைகள்

இதோ பாருங்கள், இறைவனுடைய இராச்சியம் உள்ள யிடம் உன்னுடைய இதயத்திலேயே. கி

நீ கடவுளின் கோயில் என்று அறியாயா? கடவுள் ஆவி உன்னிடம் தங்குவதை அறியாயா? கி

கடவுள் கற்பனைகள்

நான் உன் கடவுள். உனக்கு வேறு கடவுளர் கிடையார். என் பெயரால் தீமை செய்யாதே. வாரத்தில் ஒருநாள் ஒய்வுக் கொள். பெற்றோரைப் பேணு. கொல் லாதே. விபசாரம் செய்யாதே. திருடாதே. பொய்ச் சான்று புகலாதே. பிறர் பொருளை வெஃகாதே. கி

கடவுள் காணல் நின்குணம் எதிர்கொண்டோர், அறங்கொண்டோர்

அல்லதை மன்குணம் உடையோர், மாதவர் வணங்கியோர்

அல்லதை செறுதி நெஞ்சத்துச் சினநீடி னேரும் சேரா அறத்துச் சீரிலோரும் அழிதவப் படிவத் தயரியோரும் மறுபிறப் பில்லெனும் மடவோரும் சேரார் நின்னிழல், அன்னோர் அல்லது இன்னோர் சேர்வர்.

- கடுவனிள வெயினனார்

புன்பு லவ ழிய டைத்த ரக்கி லச்சினைசெய்து நன்பு லவழிதிறந்து ஞான நற்சு டர்கொளிஇ என்பி லெள்கி நெஞ்சுருகி உள்க ரிைந்தெழுந்ததோர் அன்பி லன்றி யாழி யானை யாவர் கணவல்லரே?

- திருமழிசைப் பிரான் பொறுத்தேன் புன்சொல்நெஞ் சிற்பொருளின்பமென

இரண்டும் இறுத்தேன் ஐம்புலன் கட்கிட னாயின வாயிலொட்டி