பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 67

கடவுள் வழிபாடு கடவுள் ஆவியாக இருக்கிறார். கடவுளை வழிபடு வோர் ஆன்மா மூலம், உண்மை மூலமே வழிபடக் கடவர். கி

கடவுளை வழிபட்டு அவர் கட்டளைப்படி நடப்பவர் குறைகளைக் கேட்டு கடவுள் அருள் செய்வர். கி

கடவுள் வழிபாட்டுக்கு, கழிவிரக்கம் கொண்டதற்கு அறிகுறியானவற்றைக் கொண்டு வா. கி

கசந்து பாவத்தை உணர்ந்து சொரி t

கண்ணிர் திருமஞ்சன மாட்டி இசைந்த செபமாலிகை சூட்டி

இதயபிடத்தில் இருத்தி அசைந்திடா மெய்விசுவாச

அன்பின் கிரியை நிவேதித்து பசைந்த மனமோடு ஏசுதிருப்

பாதம் பூசியுமின் செகத்திரே. - கிருஷ்ண பிள்ளை

கருணை கடவுள் ஒருவனைக் காக்க விரும்பினால் அவனிடம் கருணையைப் பிறக்கச் செய்வார். - & #5ss

கல்வி

சிந்தனையுடன் சேராத கல்வி பயன்தராது. கல்வி இல்லாத சிந்தனை அபாயமானது. - &5

நூற் கல்வி ஆசையை நாடோறும் பெருகச் செய்யும். அறநெறிப் பயிற்சி ஆசையை நாடோறும் குறுகச் செய்யும். ஆசை அற்றல், ஆற்ற முடியாதது யாதும் கிடையாது. z தா

கல்வியை நாடோறும் பெருக்காதவன் நாடோறும் சுருக்குபவனே யாவான். - 6T