பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

சர்வ சமயச் சிந்தனைகள் ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும், கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை. - வள்ளுவர்

கோபம்

பிறர் தீமை செய்யினும் அவர்க்கு நன்மையே செய்க, உன்னுடைய இதயத்தைக் கோபத்தால் மூடாதே.

அல்லாவை நம்புபவருடைய கோபம், அவருடைய

தலைப்பாகையை ஒழுங்கு செய்யும் நேரம் வரையே

நிற்கும். இ

கோயில்

உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பாலயம், வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல், தெள்ளத் த்ெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம், கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே. திருமூலர் பக்தியை அடிநிலையாகக் கொண்ட கோயில் உளது. அங்கு நின்று கடவுளை வணங்கு, மனத்தைத் தூய்மை செய்ய விரும்புபவர் அங்கே உள்ளனர். கடவுள் தூய வரையே விரும்புகிறார். . இ

சகோதரர்

உலகிலுள்ள மக்கள் அனைவரும் உடன்பிறந்தவரே அங்ங்ணமிருக்க, யாரும் உடன் பிறந்தாரிலர் என்று வருந்துவதேன்? க

சடங்குகள் உள்ளத்தில் மாசு வைத்துக் கொண்டு உடலைக்

கழுவுகிறவன், இம்மையிலும் மறுமையிலும் இன்பம்

காண மாட்டான். கி