பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 71

சாத்தான்்

கடவுளுக்குப் பணிந்து சாத்தான்ை எதிர்த்தால் அவன் உன்னைவிட்டு ஓடிவிடுவான். கி

சாதனம்

சாதனம் தீயதாயின் பயன் நல்லதாயினும் தீயதே. எ

சாந்தி

பகவான் கூறுகிறார்; என்னிடத்தில் இடைவிடாது பக்தி

யுடையவனாய், இதயத்தை அடக்கி ஆள்பவன் சாந்தி பெறுவான்.

மனத்தை அடக்காதவன் பக்தன் ஆகமுடியாது. தன் னை ஆண்டுகொள்பவனே ஆளமுடியும்

-பகவத்கீதை

ஆராவியற்கை அவாநீப்பின், அந்நிலையே பேரா இயற்கை தரும். திருவள்ளுவர் அறிவின்றித் தியானமில்லை, தியான்மின்றி அறி வில்லை. அறிவும் தியானமும் யாரிடமுண்டோ அவரே சாந்தி அடைவார். பெள

சால்பு

மனம், மொழி, மெய் மூன்றையும் அடக்கி ஆண்டு எல்லாப் பிராணிகளிடத்திலும் அன்புடையவனாய் அவாவையும் சினத்தையும் நீக்குகிறவனே சால்பு அடைவான். - மனு

எல்லாப் பிராணிகளிடத்திலும் சமமாக நிலைத்து நின்று அவை அழியும்போது தான்் அழியாமல் இருக்கும் பரம்பொருளை அறிபவனே சால்பு பெறுவான்.

k -பகவத்கீதை