பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

சர்வசமயச் சிந்தனைகள்

தேவலோகத்திலுள்ள உன் தந்தை சால்புடையவராக இருப்பது போலவே நீயும் சால்புடையவனாக ஆக வேண்டும். கி

சால்புடையவன் அருளுடையன், எந்த உயிர்க்கும் தீங்கு செய்யான், பொறையுடையன், உண்மையன், மாசற்ற மனத்தினன், எல்லோரையும் சமமாக எண்ணு பவன், எல்லோர்க்கும் உதவுபவன்.

-விஷ்ணு புராணம் சான்றோர் அறம் என்றும் இன்பம் என்றும் இரண்டு பொருள்கள் உள. சான்றோர் இன்பத்தை விட்டு அறத்தையே கொள்வர்.

அறிவில்லாதவர் ஐம்புல இன்பத்தை நாடுவர், நாடி மரணத்தின் வலையில் வீழ்வர். அறிஞர் நிலையற்ற வற்றை நிலையின என்று கருதார். -உபநிடதம்

அறிவில்லாதவர் பற்றுடன் தொழில் செய்வர் அறி வுடையவர் பற்றை நீக்கி மக்கள் நலம் நாடித் தொழில்

செய்வர். -பகவத்கீதை தான்் அடையும் நலன்களைப் பிறர்க்கும் தந்து துய்ப்ப வனே அறிஞன். பெள

வானத்திலும் உயர்ந்தோர் இருவர்; எல்லையற்ற ஆற்றல் இருந்தும் எந்தத் தீமை செய்யவும் பயன் படுத்தாதவ்னும், பொருளில்லா திருப்பினும் பிறர்க்குக் கொடுப்பவனும் ஆவர். -மகாபாரதம் கொல்லா நலத்தது நோன்மை, பிறர்தீமை

சொல்லா நலத்தது சால்பு. திருவள்ளுவர்

சால்பிற்குக் கட்டளை யாதெனில், தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல். -வள்ளுவர்