பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 75

சான்றோர்க்குரிய பட்டம் சான்றோர் எனப்படுவதே. க சான்றோர் பிறரிடம் காணும் நற்குணத்தை வளர்க்கவே நாடுவர், தீய குணத்தை யன்று. &$

பெரியோர் என்போர் குழவி உள்ளத்தை இழந்து விடா திருப்பவரே. &S

மனித குணம் அனைவர்க்கும் பொதுவானதே. அதன் சிறந்த பகுதிப்படி நடப்பவர் பெரியோர், தாழ்ந்த பகுதிப்படி நடப்பவர் சிறியோர். Ꮬ

தனக்கு ஆசிரியரைத் தேடிக் கொள்பவன் நலம் பெறுவான். ஆணவம் உடையான் அழிவான். கேள்வி கேட்பவன் அறிவு பெறுவான். &

சான்றோர் போற்றுவன மூன்று பொருள்கள்: கடவுள் கட்டளை, பெரியோர், அறிஞர் அறிவுரைகள். Ꮬ

சான்றோர் தம் ஒழுக்கத்திலேயே கண்ணா இருப்பர், அல்லாதாரோதம் பதவியிலேயே கண்ணாய் இருப்பர்.

செல்வம் கிடைக்கும் சமயம் அதை விட்டு அறத்தை விரும்புவோர், அபாயம் வரும் சமயம் அஞ்சாமல் உயிர் துறக்க உறுதி செய்வோர், வாக்குக் கொடுத்து நீண்டகால மாயினும் மறக்கா திருப்போர் - இவரே சான்றோர் என்று எண்ணத் தக்கவர். &

அறநெறியை அறியாதவன் சான்றோன் ஆக முடியாது. நல்லொழுக்கத்தை அறியாதவன் நலம் பெற முடியாது. சொற்களின் சக்தியை அறியாதவன் பிறர் குணத்தைத் தெரிய முடியாது. &Ꮌ

சான்றோரிடம் காணப்படாதவை நான்கு: ஆராயாமல்

வெறுத்தல், ஆதாரமின்றி முடிவு செய்தல், பிடிவாதம், ஆணவம். &S