பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

சர்வ சமயச் சிந்தனைகள்

சான்றோர் செய்யத்தக்க தலை சிறந்த பணி, அற நெறியில் நிற்குமாறு பிறர்க்கு உற்சாகம் ஊட்டுவதே. க

சான்றோர் நட்புக் கொள்வார், நெருங்கிப் பழகார். அல்லாதவர் நெருங்கிப் பழகுவர், நட்புக் கொள்ளார். க

சான்றோர் துன்பம் நேரினும் சோர்வுறார். நன்மை செய்யினும் புகழ் விரும்பார். தம்முடைய இதயத்தை மனித குலத்துக்குரியதாக்குவார். தங்களைப் பார்த்த மாத்திரத்தில் மக்கள் தந்தை தனயன்போல் நடப்பர். சான்றோர்க்குப் பகைவரில்லை. தா

சான்றோர்க்குத் தாழ்ந்தவர் என்பவர் கிடையார். சகலரும் அவருடைய அன்புக்கு உரியவர். தா

இதயத்தில் உண்மையுடையவர் இறைவனுடைய அடியார். எவர் அவர்க்குத் தீங்கு செய்ய இயலும்? திா

உலக நலத்தை விரும்பார், வறுமைக்காக நாணார், உலகத்தில் வாழ்ந்தாலும் உலகத்தால் ஊறு அடையார்.

தா சான்றோர் சென்றது கருதார், சேர்வது நினையார். தா

எவர் நல்ல சொல் சொல்லுகிறரோ, எவர் நல்ல விட யத்தை எண்ணுகிறரோ எவர் நல்ல செயல் செய்கிறரோ அவரே சான்றோர், அவரே அருள் பெறுவார். தா சான்றோர் வாழ்வில் பற்று வையார், மரணத்தை வெறுக்கார், வாழ்வு என்று மகிழார்; மரணம் என்று

வருந்தார், அறியாமலே வந்தார், அறியாமலே போவார். தா

நல்லவன் தன்னை மறப்பான், தெய்வீக் மனிதன் செயலற்றிருப்பான், சான்றோன் புகழை விரும்பான்.

தா