பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 79

5&

கோபத்தை அடக்குபவன் கொற்றவனினும் ஆற்றல் மிகுந்தவன், தன்னை ஆள வல்லவன் தான்ையை வெல்பவனினும் ஆற்றல் மிகுந்தவன். இ

இன் சொறகள் சினத்தைத் தணிக்கும்; கடுஞ்சொற்கள் சினத்தை எழுப்பும். இ

சினம் கொள்ளத் தயங்குபவரே சிறந்த அறிவு பெற்றவர். இ

அல்லாவை நம்புவருடைய கோபம், அவருடைய தலைப்பாகையை ஒழுங்கு செய்யும் நேரம் வரையே நிற்கும்.

சுதந்திரம் சகோதரர்களே, கடவுள் உங்களுக்கு சுதந்திரம் அருளி யுள்ளார். அதை உலக சுகத்துக்காக உபயோகியாமல் பிறரிடம் அன்பு செய்வதற்கே உபயோகியுங்கள். கி

சுயஉதவி

ஆற்றல் உன்னுடையது, அனைத்தும் உன்னுடைய ஆதிக்கத்தில் உள்ளன. உனக்கு உதவி செய்யக் கூடியவன் நீயேதான்்.

சுயநலம்

சுயநலத்தைத் தேடாதீர், ஒவ்வொருவரும் பிறர் நலத்தையே தேடக் கடவர். - கி

நன்மை செய்யச் சோர்வடையலாகாது, சோர்வடையா திருந்தால் தக்க காலத்தில் பயன் அடைவோம். கி

செயல்

கடினமாயுள்ளது அறிவதன்று, செய்வதே. தா