பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

©

(Lø60Igol60]

மனிதன் கைகளால் உழைத்து உழைத்து ஆறாம் அறிவை வளர்த்துக் கொண்டான். ஐம்புலன்களின் கூட்டுணர்ச்சியே மனம். மனம் நொடிக்கு நொடி, மணிக்கு மணி; நாளுக்கு நாள் கால வளர்ச்சியின் ஒவ்வொரு கணமும் வளர்ந்து, செழித்து உயர்ந்து கொண்டே இருப்பது. அச்செயல்தான்்சிந்தனை. அச்சிந்தனைமானுட இனத்திற்கு மட்டுமே உள்ளுயிரின் வற்றாத ஊற்றாக இருப்பது.

உலகில் எந்த ஓர் உயிர்க்கும் கிடைக்காத சிந்தனைப் பேறுமானுடத்திற்கு கிடைத்ததால்வாழ்வின்குறிக்கோளை மானுடரில் ஒரு சிலரே சிந்திக்க முடிந்தது. அச் சிந்தனை மனித வாழ்வைப் பண்படுத்த - சமைக்க முன்னோட்டமானது. சமூக வாழ்வின் முன்னோடிகளின் கருத்துகளே பின்னர் முன்னோடிகளின் பெயரால் சமயம் ஆயின. அதாவது மனித வாழ்வைப் பண்படுத்தின.

காலம் செல்லச் செல்ல சமயம் (பண்பாடு) மதமாக மாறி மக்களை வேறுபடுத்தியும் கூறுபடுத்தியும் அலைகழித்தது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சிந்தனையாளர் தோன்றினர். கிரேக்கத்தில் சாக்ரட்டீஸ், சீனத்தில் கன்பூவழியஸ், இந்தியாவில் புத்தர், ஜெருசலத்தில் ஏசு கிருஸ்த்து, அரேபியாவில் முகமது நபி, பெர்சியாவில் ஜொராதிரஸ்டர், பஞ்சாபில் குருனாநக் எனப் பல சிந்தனையாளர்கள் உலகெங்கிலும் தோன்றி மக்களுக்கு

நல்வழிகாட்டினர்.