பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

சர்வ சமயச் சிந்தனைகள்

தன்னை அறிந்தால் தலைவன் மேற்பற்றலது பின்னை யொரு பற்றும் உண்டோ பேசாய்

பராபரமே. -தாயுமானவர் அறந்தான்ியற்று மவனிலுங் கோடி அதிகமில்லந் துறந்தான்வனிற் சதகோடியுள்ளத் துறவுடையோன் மறந்தான்றக்கற்றறிவோடிருந்திருவாதனையற்று இறந்தான்் பெருமையை என்சொல்லுவேன் கச்சி எகம்பனே. -பட்டினத்தார்

துறந்தேனார் வச்செற்றச் சுற்றம் துறந்தமையால் சிறந்தேன் நின்னடிக் கேயடிமை - திருமாலே! அறந்தா னாய்த்திரிவாய்! உன்னையென் மனத்தகத்தே திறம்பா மற்கொண்டேன்திருவிண் ணகரானே!

-திருமங்கையாழ்வார் கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் உள்ளக் களவுமென்று உரவோர் துறந்தன. பெள

துறவு பூண்டவன் தீமை செய்தால் நரகத்தினின்று தப்பான். இல்லறத்தான்் நன்னெறியில் நின்றால் வீடு பெறுவான். ச

துறக்கவேண்டியவை அழுக்காறு, அவா, வெகுளி

மூன்றுமாகும். &F

அழுக்காறு உடையவன் ஒருநாளும் நலம் அடை

யான். &

துன்பம் -

இன்பத்துள் இன்பம் விழையாதான்், துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். திருவள்ளுவர் இன்பம் விழையான், இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன். திருவள்ளுவர்