பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s

புலவர் த. கோவேந்தன் 87

அவா இல்லார்க் கில்லாகும் துன்பம்அஃதுண்டேல் தவா அது மேன்மேல் வரும்.

திருவள்ளுவர் வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. திருவள்ளுவர் * தீமையின் பயன் துன்பம், நன்மையின் பயன் இன்பம். பெள

  • எல்லா உயிர்களும் இன்பத்தையே விரும்புகின்றன. அதை அறிந்தும் தன் இன்பத்துக்காகப் பிற உயிர் கட்குத் துன்பம் செய்பவன் இன்பம் காணமாட்டான்.

பெள

  • பிறந்தோருறுவது பெருகிய துன்பம்,

பிறவா ருறுவது பெரும்பே ரின்பம்; பற்றின் வருவது முன்னது, பின்னது அற்றோர் உறுவது அறிக. சாத்தனார்.பெள

  • பொய்யாற்று ஒழுக்கம் பொருளெனக் கொண்டோர்

கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ? பெள

  • துன்பம் தோற்றம், பற்றே காரணம்: -

இன்பம் விடே பற்றிலி காரணம். பெள-சாத்தனார்

  • இன்சொல் விளைநிலனா, ஈதலே வித்தாக,

வன்சொல் களைகட்டு, வாய்மை எருவட்டி அன்பு நீராக அறப்பைங்கூழ் ஆக்குவார்க்கு என்றும் இடும்பை இல். ச-அறநெறிச்சாரம் * மெய்வகை தெரிதல் ஞானம், *

விளங்கிய பொருள்கள் தம்மைப் , பொய்வகை இன்றித் தேறல் காட்சி, ஐம் பொறியும் வாட்டி پةِ உய்வகை உயிரைத் தேயாது

ஒழுகுதல் ஒழுக்கம், மூன்றும்