பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 91

கண் அழுக்கைக் காணலாம், காது அழுக்கானவற்றைக் கேட்கலாம், ஆனால் அழுக்கைக் காணவும் கேட்கவும் மனத்துக்கு இடங் கொடாதே. சி உலகத்திலுள்ள ஒவ்வொருவனும் தான்ே தன்னுடைய நல்ல எண்ணங்கள், சொற்கள், செயல்கள் ஆகிய வற்றால் தூய்மை பெறமுடியும். ஜா தூய்மையே உயிருக்கு அடுத்தபடியாக மனிதனுக்கு நன்மையானது. அஹாரா வகுத்த அறநெறியில் நின்று மனத்தை நல்ல எண்ணங்களாலும் சொற்களாலும் செயல்களாலும் தூய்மை செய்வதே தூய்மையாகும்.

33ss Jol தூய்மை தெய்வத்தன்மைக்கு அடுத்த படியிலுள்ளது? துணியை நீரால் தூய்மை செய்யலாம், மனத்திலுள்ள பாவமாகிய மாசைக் கடவுள் நாமத்தால் கழுவ வேண்டும். GT

இதய மாசு ஆசை, நாவின் மாசு பொய், கண்ணின் மாசு வெஃகுதல், காதின் மாசு குறளையைக் கேட்டல், கடவுளை அறியும் பக்தரிடம் மாசு எதுவும் கிடையாது

நண்பனே! மனத்தால் கடவுளை வழிபடு, உன் மனம்

தூய்மை பெறும். 6T

என் இதயம் தூய்மை அடைந்துவிட்டது, இறை

வனைக் காண்கின்றேன். 6T

நட்பு

கொடுக்கக் கடினமானதைக் கொடுத்தல், செய்யக் கடினமானதைச் செய்தல், பொறுக்கக் கடினமானதைப் பொறுத்தல் - இம் மூன்றும் உடையவனே நண்பன்.

பெள நல்ல நண்பர் உடையவர் நலம்பெறுவர், தீய் நண்பர் உடையவர் அழிவர். பெள