பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்டு 8

தவர்கள் போலவே, அற்புதங்களையே சிருஷ்டித்து விடு கி றார்கள். ஷேக்ஸ்பியர் எழுதிய கலையோவியங்களான, "ஹாம்லட்', ரோமியோ ஜூலியட்' நாடகங்களும் அவ்விதமே பிறந்திருக்கின்றன. கலையும் கவிதையும் உலகளாவியது; காலத் தையும் மீறி உயர்ந்து பறப்பது கலை.

கலைஞன் அழகையே சிருஷ்டிக்கிறான்; கலைஞன் திற மையை, ஒரு விமர்சகன் தான் நன்கு உணர்ந்து வேறு அனுபவித்த பாஷையிலே மிக அழகாக எடுத்துரைக்கின்றான். கலைஞனை, விமர்சகன் அருமையாக, மிக ஆழமாகச் சிருஷ்டி எழிலோடு மொழி பெயர்க்கின்றான். விமர்சனம், சுயசரிதையின் எழிலோவி யமாகவே உதயமாகிறது.

அழகின் அருமையை உணராமல், அதிலே குற்றம் கண்டு பிடிக்க முயல்வது அறிவீனம். இது ஒரு பெரும் பிழை.

அழகின் சிருஷ்டி எழிலிலே அழகின் அருமையைக் காண்பவர்கள் பயிற்சி பெற்ற ஞான மேதைகள்.

கலைஞன் எதையும் ஆவேசத்தோடு ருஜுச் செய்ய முன் வருபனவல்லவே! கலைஞன் கலைக் கண்ணோடு கலையையே தேடுகிறான். அவன் வேறு எதையும் விரும்பமாட்டான். கலைஞன், தன் மனோபாவ விரிவால் எதையும் ஆழமாகச் சித்த ரித்துக் காட்ட முடியும். அவனுடைய கலா சிருஷ்டியிலே, மனிதப் பண்பும், ஹிருதய பாவமும் மண்டிக் கிடக்கும்.

கலைஞனுக்குச் சிந்தனையும், பாஷையும் அரிய துணை யாக அமையும் கருவிகளேயாம். பாவம், புண்ணியம், இரண்டும் கூட கலையிலே கலக்க வேண்டிய பண்டங்களாகவே வந்து விடுகின்றன.

கலையின் வெளியீடுகளைப் பற்றி பலரும் பலவிதமான அபிப்பிராயங்கள் கூறினால், அந்தக் கலா சிருஷ்டி புதிதென்றும்,