பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்டு 10

உண்டு. கலைகள் மாறுந்தோறும் மாறுதலடையும் ஒளிவீசும் சந்திரகாந்தக் கற்களும், முட்டை வடிவில் நீலக் கற்களும், நீலோத்பல மலர்கள் போன்ற சில கற்களும் என்னிடம் உண்டு. கற்களின் நெஞ்சில் கடல் அலையிடுகிறது. உள்ளே உறங்கும் நீல அலைகளைச் சந்திரன் துன்புறுத்துவதில்லை. மஞ்சள் நிறமுள்ள இரத்தினங்கள், கடற் பச்சைக் கற்கள், செந்நிற மாணிக்கங்கள் இன்னும் பல அற்புதமான கற்களும் என்னிடம் உண்டு. நிமூதியா மன்னன் தீக்கோழியின் இறகுகளாலான ஒரு கவுனை அனுப்பி யிருக்கிறான். இந்தத் தீவுகளின் அரசன் மிருதுவான கிளிச் சிறகு களால் பின்னிய நான்கு அழகிய விசிறிகள் அனுப்பியதையும் வைத்திருக்கிறேன். தங்கப் பேழையில் மூன்று வைடுரியக் கற்கள் வைத்திருக்கிறேன். என்னிடம் வேறொரு அபூர்வமான கல் இருக் கிறது. அதனுள் ஒரு பெண் கூர்ந்து பார்ப்பதானது ஆபத்து. அதனை இளைஞர்கள் பார்த்தாலும் துன்பம்தான். இந்தப் பரந்த உலகில் அதனைக் கொண்டு பல அற்புதங்கள் நிகழ்த் தலாம்......... 3 *

இந்த அபூர்வ வருணையிலே ஆஸ்கார் ஒயில்டின் நடை ஒரு தந்தச் சிற்பமாகவே காட்சியளிக்கிறது; கலைஞன், கவிஞன் கண்கொண்டு பார்த்த பண்டகங்கள் எல்லாம், எவ்வளவு அருமை யாக வருணம் போல ஒளி வீசுகின்ற பாஷையிலே தீட்டப்பட்டி ருக்கின்றன.

'தேவ நீதி மன்றம்' என்ற தலைப்பில் ஆஸ்கார் ஒயில்டின் ஆழ்ந்த கருத்தைப் பாருங்கள்:

“தேவ நீதி மன்றம், மனிதன் கடவுள் சன்னிதானம் வந்த பொழுது நிசப்தம், கடவுள் மனிதனுடைய ஜீவிய ஏட்டைத் திறந்தார். 'உன் வாழ்வு தீமை நிறைந்ததாகும். உதவி வேண்டிய வர்களுக்குத் துக்கம் தந்தாய். ஏழைகள் இரந்த பொழுது செவி சாய்க்கவில்லை. அனாதைகள் ஐஸ்வரியத்தை அபகரித்தாய். நல்லோர் உணவைப் பறித்து நாய்களுக்கு இட்டாய்' என்று கடவுள் கூறினார்.