பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:энхий ஒயில்ட்டு 12

ஷாவும் பேருண்மைகளையே பொழிந்து விடுகிறார்கள்; நடையின் விசித்திரக் கூர்மையிலே, உண்மையே ஒட்டகம் போலக் காட்சியளிக்கிறது!

ஆஸ்கார் ஒயில்ட்டு, மும்மொழிப் புலவர்: லத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம் மூன்று பாஷைகளையும் அனுபவித்து மிக நுட்பமாக இலக்கிய மணத்துடன் எழுதும் அபூர்வ ஆற்றல் பெற்றவர்;

'டிஸ்ராலி'யைப் போல மிக ஆடம்பரமான ஆடையை அணிந்து கொள்ள ஆசைப்பட்டார்;

ஷெரிடனைப்போல, 'விட்டி"யாக வேடிக்கையாகப் பேசவும் எழுதவும் முடியும்; ஆனால் ஷெரிடனைப் போல, அவ்வளவு ஆழமாகப் பிறரைத் தாக்கக்கூடிய SATRE வசைப் பாட்டில் இறங்க மாட்டார்.

வருணங்களிலே வெறிக்கொண்ட மனம், அவருடைய இலக்கியப் பேனாவை சித்திரக் கோலாகவே மாற்றிவிட்டது என்று சொல்லலாம். ஷாவின் நடையிலே, இவ்வளவு வருண சித்தரம் இல்லை. ஒயில்ட்டு நேரே எழுதுகிறார்; (SHAW) ஷா சுற்றிச்சுற்றி எழுதுகிறார். ஆங்கில பாஷையே, ஆஸ்கார் ஒயில்டின் பேனா முனையிலே டான்ஸ் ஆடுகிறது.

ஒயில்டின் கடித இலக்கியம், தனி இன்பம் கொண்டது.

வீ.ஆர்.எம். செட்டியார்