பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சலேரம்

(அரண்ம்னை விருந்து மண்டபத்தின் மேல்மாடி பலகணி யின்மேல் சில போர்வீரர்கள் சாய்ந்து கொண்டிருக்கின்றனர். இப்புறத்திலே மாபெரும் படிக்கட்டுகள் செல்லுகின்றன)

வானில் நிலவு சிரியா இளைஞன் :

மன்னர் மகள் சலோம் இன்றிரவு எவ்வளவு அழகாக இருக்கிறாள்!

மன்னியின் பணியாள் :

நிலவினைப்பார், புதுமையாக இருக்கிறது! கல்லறை யிலிருந்து பெற்று எழும் மங்கையைப் போலத் தோன்றுகிறது. அது இறந்துபோன பெண்ணைப்போல் இருக்கிறது. மாண்டு மடிந்த பொருள்களைத் தேடிக்கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது அல்லவா?

சிரியா இளைஞன் :

ஆம், பார்ப்பதற்கு அது வியப்பார்வமாகத் தோன்றுகிறது. மஞ்சள் மெல்லாடையை அணிந்திருக்கும் சின்னஞ்சிறிய இளவர சியைப் போன்று இருக்கிறது. வெண் புறாக்களையே காலடிக ளாகக் கொண்ட இளவரசியைப்போல இருக்கிறது. அது, அது கூத்து ஆடுவதுபோலத் தோன்றுகிறது.

மன்னியின் பணியாள் :

வெண்ணிலவு செத்துப்போன பெண் போல இருக்கிறது. அது மிகவும் மெல்லெனச் செல்லுகிறது.

(விருந்து மண்டபத்தில் பேரொலி)