பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்டு . 16

முதல் வீரன் :

என்ன ஆரவாரம் காட்டு விலங்குகளைப் போல

ஊளையிடும் அவர்கள் யார்?

இரண்டாவது வீரன் :

யூதர்கள், அவர்கள் எப்போதுமே இதுபோலத்தான்.

மதத்தைப் பற்றிப் பிணக்கிடுகிறார்கள்.

முதல் வீரன் :

மதத்தைப்பற்றி ஏன் பிணக்கிடுகிறார்கள்?

இரண்டாவது வீரன் :

நான் சொல்லேன். அவர்கள் எப்போதும் பிணக்கிடு

கிறார்கள். எடுத்துக்காட்டாக பாரிசீயர்கள் தேவதைகள் இருப்

பதாகச் சொல்லுகிறார்கள். சடுசியர்கள் கிடையாதென்று

சொல்லுகிறார்கள்.

முதல் வீரன் :

இதைப்பற்றி எல்லாம் பிணக்கிடுவது எள்ளலாகும்.

சிரியா இளைஞன் :

மன்னன் மகள் சலோம் இன்றிரவு எவ்வளவு அழகாக

இருக்கிறாள்!

மன்னியின் பணியாள் :

நீ எப்போதும் அவளையே பார்த்துக்கொண்டு இருக்

கிறாய். நீ அளவுக்கு மிஞ்சி அவளை நோக்குகிறாய். அந்த நிலை

மையில் இருப்பவர்களைப் பார்ப்பது தொல்லை. ஏதாவது

அஞ்சத்தக்கது நிகழலாம்.

சிரியா இளைஞன் :

இன்றிரவு அவள் அரும்பேரழகியாய் இருக்கிறாள்.