பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 சலோம்

முதல் வீரன் :

மன்னரைப் பார்த்தால் கவலையாக இருப்பவர் போலத் தெரிகிறது.

இரண்டாவது வீரன் :

ஆம், கவலையாகத்தான் தோன்றுகிறார்.

முதல் வீரன் :

அவர் எதையோ பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இரண்டாவது வீரன்:

அவர் யாரையோ பார்த்துக் கொண்டிருக்கிறார்.

முதல் வீரன் :

யாரைப் பரிர்க்கிறார்?

இரண்டாவது வீரன் :

நான் சொல்லமாட்டேன்.

சிரியா இளைஞன் :

அரசிளர் செல்வி எவ்வளவு மெலிந்து போய் விட்டாள்! இதுபோல ஒரு முறைகூட நான் அவளைப் பார்த்தது இல்லை. வெள்ளிக் கண்ணாடியிலே தோன்றும் வெள்ளைத் தாமரை மலரின் நிழலைப்போல இருக்கிறாள் அவள்.

மன்னியின் பணியாள் :

நீ அவளைப் பார்க்கலாகாது. நீ அளவுக்கு மீறி அவளைப் பார்க்கிறாய்.

முதல் வீரன் :

மன்னனுடைய கிண்ணத்திலே மதுவை நிரப்பி இருக்கிறாள் மின்னி.