பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 சலோம்

நாங்கள் பலி கொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது. காரணம், அவை எங்களிடம் கடுமையாகவே இருக்கின்றன.

காப்படோசியன் :

என் நாட்டிலே தெய்வங்கள் இல்லை. அவற்றை உரோமானியர் விரட்டியடித்து விட்டனர். அவை மலைகளுக் குள்ளே ஒளிந்து கொண்டிருப்பதாகச் சிலர் சொல்லுகிறார்கள். ஆனால், அதை நான் நம்பவில்லை. மும்முறை இராப்போதில் மலைக்குப் போய் பல இடங்களிலும் தேடினேன். அவற்றைக் காணோம். கடைசியில், பெயர் சொல்லியும் அழைத்துப் பார்த்தேன். அவை வரவில்லை. அவை எல்லாமே இறந்து போய்விட்டதென்று நினைக்கிறேன்.

முதல் வீரன் :

கண்ணால் காணமுடியாத தெய்வத்தையே யூதர்கள் வணங்குகிறார்கள்.

காப்படோசியன் :

அதென்ன, எனக்கு விளங்கவில்லையே!

முதல் வீரன் :

அதாவது, நாம் பார்க்க முடியாத பொருள்களைத்தான் அவர்கள் நம்புகிறார்கள்.

காப்படோசியன் :

இது முற்றிலும் எள்ளலாகவே இருக்கிறது.

சோகனானுடைய குரல் :

எனக்குப் பின்னால், என்னைக்காட்டிலும் சிறந்த வலு வுள்ளவன் ஒருவன் தோன்றுவான். அவனுடைய செருப்பு முடி களை அவிழ்ப்பதற்குக் கூட தகுதியானவன் அல்லேன் நான். அவன் நிலவுலகிலே தோன்றியதும், தனியான இடங்கள் களிப் புறும் அல்லியைப்போல அவை மலர்பூக்கும். கண்ணிழந்த குரு