பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்கார் ஒயில்ட்டு 20

டர்கள் விழிபெறுவர் செவிடர்களுக்குக் காது கேட்கும்; குழந் தைகள் வனவிலங்குகளின் குகையிலே புகுந்து அரிமாவின் பிடரி மயிர் பிடித்து இழுத்துக் கொண்டு வருவார்கள். இரண்டாவது வீரன் :

பேசாமல் இருக்கச் சொல், அவன் எப்போதும் கிண்டலாக எதையாவது சொல்லிக்கொண்டிருக்கிறான்.

முதல் வீரன் :

முடியாது, அவன் வாலறிவன். வெகு நல்லவன். நாள்தோறும் நான் உணவு அளிக்கும்போது, அவன் என்னை, வாழ்த்துகிறான்.

காப்படோசியன் :

அவன் யார்?

முதல் வீரன் :

ஒரு முற்றுணர்ந்தோன். காப்படோசியன் :

பெயர் என்ன?

முதல் வீரன் :

சோகனான்.

காப்படோசியன் :

எங்கிருந்து வந்திருக்கிறான் ?

முதல் வீரன் :

பாலைவனத்திலிருந்து. அங்கு வெட்டுக்கிளிகளையும் காட்டுத்தேனையுமே உண்டு வந்தான். ஒட்டக மயிரையே உடை யாக அணிந்திருந்தான். இடுப்பிலே தோல் அணி அணிந் திருந்தான். பார்ப்பதற்கு வெகு அஞ்சத்தக்கவாக இருந்தான்.