பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 சலோம்

பெருந்திரளான கூட்டம் அவனைப் பின் தொடர்வது வழக்கம். அவனுக்குத் தொண்டர்களும் இருந்தார்கள்.

காப்படோசியன் :

என்ன சொல்லுகிறான் ?

முதல் வீரன் :

நமக்குத் தெரியாது. சிற்சில சமயத்திலே அஞ்சத்தக்க சொற்களைச் சொல்லுகிறான். ஆனால், அவன் சொல்லுவதைப் புரிந்து கொள்வது கடினம்.

காப்படேசியன் :

அவனைப் பார்க்கலாமா?

முதல் வீரன் :

கூடாது என்பது மன்னன் ஆணை.

சிரியா வாலிபன் :

இளவரசி விசிறியால் முகத்தை மறைத்துக் கொண்டு இருக் கிறாள். அவளுடைய வெண்மையான சிறிய கைகள், கூடு களுக்குப் பறந்து செல்லும் புறாக்களைப்போல, சிலிர்த்து ஆடிக் கொண்டு இருக்கின்றன.

மன்னியின் பணியாள் :

என்ன செயல் செய்கிறாய் ? ஏன் அவளைப் பார்க்கிறாய்? நீ அவளைப் பார்க்கக் கூடாது..... அஞ்சத்தக்க நிகழ்வு ஏதாவது நிகழலாம்.

காப்படோசியன் :

(சிறையைச் சுட்டிக்காட்டி) என்ன வியத்தகு சிறை!

முதலாவது வீரன் :

உடல் நலத்துக்கு மிக்க கேடாய் இருக்கும்.