பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்டு 22

இரண்டாவது காவலாள் :

மன்னி எரோதியாவின் முதல் கணவனும், இப்போதைய மன்னனின் அண்ணனுமாகிய முன்னாள் அரசர், அதில் பனிரெண்டு ஆண்டு சிறையுண்டிருந்தார். அப்படி இருந்தும் சிறை அவர்ைக் கொல்லவில்லை. தம்பி அவருடைய கழுத்தை முறித்துக் கொல்லச் சொன்னார். காப்படோசியன் :

கழுத்தை முறித்துக் கொல்லும்படியாகவா? யார் செய்தது அதை? இரண்டாவது வீரன் :

(கொலைஞனைச் சுட்டிக் காட்டியவாறு) . அதோ நிற்கிறானே அவன். அவன் பெயர் நாமன்.

காப்படோசியன் :

அவன் அஞ்சவில்லையா ? இரண்டாவது வீரன் :

இல்லை, இல்லை. அரசன் தன் கணையாழியை அவனுக்கு அனுபினான்.

காப்படோசியன் :

என்ன கணையாழி?

இரண்டாவது வீரன் : -

கொலைத்தண்டனைக் கணையாழி. அதனாலே, அவன் அஞ்சவில்லை.

காப்படோசியன் :

என்ன இருந்தாலும், கழுத்தை முறித்து ஒர் அரசனைக் கொல்லுவது அஞ்சத்தக்கது.