பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகார் ஒயில்ட்டு 26

அடிமை :

இளவரசி, விருந்திற்கு வருமாறு மன்னர் உங்களை வேண்டுகிறார்.

சலோம் :

நான் வரமாட்டேன்.

சிரியா இளைஞன் :

இளவரசி, என்னை மன்னியுங்கள் தாங்கள் விருந்திற்குப் போகாவிடில் ஏதாவது கேடு நிகழலாம்.

சலோம் :

இந்த முற்றுணர்ந்தோன் முதியவனா ? சிரியா இளைஞன் :

இளவரசி விருந்திற்குப் போவதுதான் நல்லது. தங்களை

அழைத்துக் செல்லட்டுமா?

சலோம் :

இந்த அறிவன் ....இவன் என்ன, முதியவனா?

முதல் வீரன் :

இல்லை, இளவரசி, அவன் மிக்க இளைஞன். இரண்டாவது வீரன் :

உறுதியாகச் சொல்ல முடியாது. இவனே இலியாசு என்றும் சிலர் சொல்லுகிறார்கள்.

சலோம் :

இலியாசு என்பவன் யார்? இரண்டாவது வீரன் :

வெகு காலத்திற்கு முன்னால் இந்த தேசத்திலே தோன்றிய முற்றுணர்ந்தோன் இளவரசி.