பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 சலோம்

அடிமை :

மன்னருக்கு. என்ன விடை சொல்லுவது, இளவரசி ?

சோகனான் :

ஒ, பாலத்தீனமே! உன்னை அடித்தவனுடைய தடி ஒடிந்த தற்காகக் களி கொள்ள வேண்டாம். பாம்பின் வயிற்றிலிருந்து கரு நாகம் பிறக்கும். அது பறவைகளை எல்லாம் விழுங்கிவிடும்.

சலோம் :

என்ன வியத்தகு குரல் அவனுடன் பேசுகிறேன்.

முதல் காவலன் :

இளவரசி, அது நடக்கிற காரியம் அன்று. அவனுடன் யாரும் பேசுவதை மன்னர் விரும்பவில்லை. முதன்மைக் குருகூட அவனோடு பேசக்கூடாதென்று மன்னர் ஆணையிட்டிருக்கிறார்.

சலோம் :

நான் அவனுடன் பேச விரும்புகிறேன்.

முதல் வீரன் :

அது இயலாத செயல், இளவரசி.

சலோம் :

அவனுடன் பேசுவேன். சிரியா இளைஞன் :

விருந்திற்குப் போவது நல்லது அன்றோ? சலோம் :

இந்த முற்றுணர்ந்தோனை அழைத்து வாருங்கள். (அடிமை போகிறான்) .

முதல் வீரன் :

எங்களுக்குத் துணிவு இல்லை, இளவரசி.