பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்டு 28 சலோம் (வீரர்களை நோக்கி) :

நான் சொல்லுவது கேட்கவில்லையா? முற்றுணர்ந் தோனை அழைத்துக்கொண்டு வாருங்கள். நான் அவனைப் பார்க்க விரும்புகிறேன்.

இரண்டாவது வீரன் :

இளவரசி, இந்த வேலையைச் செய்யும்படி எங்களைச் சொல்லாதீர்கள்.

சலோம் :

என்னைக் காத்துக்கொண்டிருக்க வைக்கிறீர்களே!

முதல் வீரன் :

இளவரசி எங்கள் உயிர் எல்லாம் உங்களுடையதே. ஆனால், இப்போது நீங்கள் சொன்னதை மட்டும் நாங்கள் செய்ய மாட்டோம்.

சலோம் :

(சிரியா இளைஞனை நோக்கியவாறு) ஆ!

மன்னியின் பணியாள் :

என்ன நடக்கப் போகிறதோ? ஏதாவது தீங்கு நேரும் என்பது உறுதி.

சலோம் :

(சிரியா இளைஞனிடம் சென்று) எனக்காக, இது செய்யேன், நாராபாத்து செய்யமாட்டாயா? உன்னிடம் நான் எப்போதும் அன்பாகவே இருந்திருக்கிறேன். எனக்காக இது செய். இந்த வியப்புமிகு அறிவனை நான் பார்க்கிறேன். அவனைப்பற்றி மக்கள் எவ்வளவோ சொல்லுகிறார்கள். மன்னரும் அவனைப்பற்றிப் பலமுறை சொல்லி இருக்கிறார். மன்னர் அவனைக் கண்டு அஞ்சுகிறார் என்று நினைக்கிறேன். நீ, நீயுங்கூட அவனைக்கண்டு அங்சுகிறாயா, நாராபாத்து?