பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்டு 30

சிரியா இளைஞன் :

ஆம். வெண்ணிலா வனப்போடு தோன்றுகிறது. முகில் திரை வழியே சின்னஞ்சிறிய இளவரசியைப் போலப் புன் முறுவல் பூத்துக்கொண்டிருக்கிறது.

(முற்றுணர்ந்தோன் வருகிறான். சலோம் அவனைப் பார்த்துவிட்டு மெல்லெனப் பின் வாங்குகிறாள்.) சோகனான் :

பழியும் அருவருப்பும் நிறைந்த அவன் எங்கே இருக் கிறான்? வெள்ளி உடை அணிந்தவாறு எல்லோர் முன்பாக ஒரு நாள் இறந்து போகப்போகும் அந்த மனிதன் எங்கே? அவனை வெளியே வரச்சொல்லுங்கள், பாழடைந்த இடங்களிலும் மன்னவர்களின் மாளிகைகளிலும் இரைந்து கதறியவன் குரலைக் கேட்கட்டும்.

சலோம் :

யாரைப்பற்றிப் பேசுகிறான்? சிரியா இளைஞன் :

உங்களால் கண்டுபிடிக்க முடியாது. இளவரசி.

சோகனான் :

கவர்களிலேயிருந்த ஒவியங்களைப் பார்த்துவிட்டு சால்டியாவிற்குத் தூதுவர்களை அனுப்பியவள் எங்கே? சலோம் :

அம்மாவைப் பற்றி அல்லவா சொல்லுகிறான்? சிரியா இளைஞன் :

இல்லை, இல்லை. இளவரசி. சலோம் :

ஆம், என் அன்னையைப் பற்றித்தான்................. என் அன்னையைப் பற்றித்தான்.