பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 சலோம்

சோகனான் :

அச்சீரியா படைத்தலைவர்களைச் சேர்ந்த அந்த மாது எங்கே? அழகிய உடைகளை அணிந்து, பொற்கேடயங்களைத் தாங்கி, வெள்ளிக் கவிப்புகளை அணிந்திருக்கும் வீரர்களான எகிப்திய இளைஞர்களைச் சேர்ந்த அந்தப் பெண் எங்கே? பழிப் பாகிய மஞ்சத்திலே கண்ணுறங்கும் அவளை எழுப்புங்கள். பொன்னுலகத்துக்கு வழிகாட்டுபவன் சொல்லும், சொற்களைக்த் கேட்டுத் தான் செய்த பாவத்தை நினைத்து, நினைத்து கண்ணிர் விடட்டும், வரச்சொல்லுங்கள்.

சலோம் :

அஞ்சத்தக்கவனாக இருக்கிறான், பார்ப்பதற்கு மிக்க அச்ச மூட்டுபவனாய் இருக்கிறான்.

சிரியா இளைஞன்:

இளவரசி அருட்கூர்ந்து இங்கே இருக்காதீர்கள், உங்களை வேண்டுகிறேன்.

சலோம் :

எல்லாவற்றைக் காட்டிலும் அவனுடைய கண்கள்தாம் அஞ்சத்தக்கவையாக இருக்கின்றன. அவை வனவிலங்குகள் வாழும் இருண்ட குகைகள்போலத் தோன்றுகின்றன,....அவன் மீண்டும் பேசுவானா?

சிரியா இளைஞன் :

இளவரசி, இங்கே இருக்காதீர்கள், உங்களைக் கெஞ்சு கிறேன்.

சலோம் :

ஆ, அவன் எவ்வளவு மெலிந்திருக்கிறான். மெல்லிய தந்தப்பதுமைப்போல இருக்கிறான், வெள்ளிச் சிற்பம் போல் நிற்கிறான். நிலவைப்போல வனப்பு மிகுந்திருக்கிறான். நிலாக்