பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்டு 36

மெல்லிய சீரடிகளைக் காட்டிலும் சிவந்தன. உனது இதழ்கள். கானகத்திலே அரிமாவைக் கொன்றுவிட்டு வந்தவன் காலடி களைப்போல இருக்கின்றன. அவை. அந்திப் பொழுதிலே, வலைஞர்கள் கடலிலே கண்டெடுத்த பவளக்கோவை போலிருக் கிறது உன் வாய், உனது உதடுகள்.... மோவாபியர்கள் சுரங்கங் களிலே கண்டெடுக்கும் குங்குமத்தைக் காட்டிலும் சிவந்தன உன் உதடுகள். குங்கும வண்ணம் தடவி, பவளத்தை ஒரு மூலையிலே தொங்கவிட்டிருக்கும் பாரசீக மன்னன் வில்லைப்போல இருக் கிறது உன்வாய். உன்னுடைய வாயைப்போலச் சிவந்த பொருள் உலகில் எதுவும் இல்லை.... அதை முத்தம் இடுகிறேன்.

சோகனான் :

கூடாது, பாபிலோன் குமாரியே, சோடாம் புதல்வியே; தள்ளிப்போ.

சலோம் :

எப்படியாவது உனது வாயிதழை முத்தம் இடுவேன். ஆம் முத்தம் இட்டே தீருவேன், சோகனான். - சிரியா இளைஞன் :

இளவரசி, இளவரசி, நறுமணப் பூங்காவாக விளங்கும் நீங்கள், குயில்கள் எல்லாவற்றையும் காட்டிலும் மேலான குயி லாக விளங்கும் நீங்கள் அவனைப் பார்க்காதீர்கள் பார்க்காதீர்கள், இவ்வகையில் அவனுடன் பேசாதீர்கள், இதைப் பொறுக்க முடிய வில்லை. இளவரசி, இதுபோல அவனுடன் பேசாதீர்கள்.

சலோம் :

சோகனான், நான் உன்னை முத்தம் இடப் போகிறேன்.

சிரியா இளைஞன் :

ஆ, ஐயோ! (அவன் தற்கொலை செய்துகொண்டு, சலோ மிற்கும் சோகனானுக்கும் இடையே வீழ்கிறான்)