பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்சி 38

கொண்டிருக்கிறான், கரையருகே மண்டியிட்டுக் குனிந்து, பெயர் சொல்லி அவனை அழை. அவன் உன்னருகே வரும்போது திருவ டிகளிலே வீழ்ந்து வணங்கி, உனது பாவங்களை மன்னிக்கும்படி யாகக் கேட்டுக்கொள்.

சலோம் :

உனது வாயை முத்தம் இடுகிறேன்.

சோகனான் :

தொலைவிலே போ, பாபிலோன் புதல்வியே விலை மகளின் குமாரியே, தள்ளிப்போ.

சலோம் :

சோகனான், உனது இதழ்களை முத்தமிடுவேன்.

சோகனான் :

உன்னைப் பார்க்க எனக்கு விருப்பம் இல்லை. சலோம், அருவருக்கத்தக்க உன்னை நான் பார்க்கமாட்டேன். (அவன் போய்விடுகிறான்)

சலோம் :

உனது வாயை முத்தம் இடுவேன். ஆம், முத்தம் இடுவேன்.

முதல் வீரன் :

நாம் பிணத்தை வேறோரிடத்திற்குக் கொண்டுபோக வேண்டும். மன்னன் தன் கையால் இறந்தவர்களைத் தவிர மற்ற வர்களுடைய உடல்களைக் காண விரும்புவதில்லை.

மன்னியின் பணியாள் :

அவன் என் உடன்பிறந்தோன்; உடன்பிறந்தோனைக் காட்டிலும் நெருங்கிய உறவு. மாலைவேளையிலே ஆற்றங் கரைப் பக்கமாக நடந்து போவோம் நாங்கள். அப்போது அவன்