பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 சலோம்

தன் தேயத்தைப்பற்றி சொல்லுவான், அவன் எப்போதுமே மெது வாகப் பேசுவான், குழல் ஒசையைப் போல இருக்கும் குரல், ஆற்றிலே தோன்றும் எதிரொளியை ஆவலுடன் நோக்குவான்.

இரண்டாவது வீரன் :

நீ சொல்லுவது உண்மை. பிணத்தை ஒளித்து வைக்க வேண்டும். அரசன் அதைப் பார்ப்பது சரியன்று.

முதல் வீரன் :

அரசர் இங்கே வரவா போகிறார்? அவர் மாடிக்கு வருவதே இல்ல்ை. அவருக்கு முற்றுணர்ந்த அறிவாளியிடம் மிக்க அச்சம். (அரசனும் அரசியும் அவையோர்களும் வருகிறார்கள்)

மன்னன் :

சலோம் எங்கே இளவரசி எங்கே நான் விருந்திற்கு வரச்சொன்னேனே, ஏன் வரவில்லை? ஆ, அதோ அங்கே இருக் கிறாள்!

மன்னி :

நீங்கள் அவளைப் பார்க்கக்கூடாது. நீங்கள் எப்போதும் அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.

மன்னன் :

இன்று வெண்ணிலா பார்ப்பதற்கு வியப்பாகத் தோன்று கிறது. காதலர்களைத் தேடி நாலாபுறமும் அலையும் வெறிபிடித்த மங்கையைப் போலத் தோன்றுகிறது. அது அம்மணமாக, முற்றிலும் அம்மணமாகவே இருக்கிறது. அதற்கு உடையுடுத்த முயலுகின்றன கருமுகில்கள். ஆனால் அதுவோ, அவர்கள் கையில் அகப்படாமல் தப்பி ஓடுகிறது. அது நீலவானிலே பிறந்த மேனியாகக் காட்சி அளிக்கிறது. அது மதுவருந்திய மங்கையைப் போல முகில்களுக்கிடையிலே சுளிந்து நெளிந்து செல்லுகிறது. அது காதலர்களைத் தேடி அலைகிறது என்பதில் ஐயமில்லை, அது வெறிபிடித்த பெண்ணைப்போலத்தானே இருக்கிறது?