பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்டு 40

மன்னி :

இல்லை, நிலா நிலவைப்போலவே இருக்கிறது. நாம் உள்ளே போவோம். ........ இங்கே நமக்கு என்ன வேலை ?

மன்னன் :

நான், இங்கேயே இருப்பேன். மானசே, இங்கே கம்பளங் களை விரி, விளக்குகளை ஏற்று, தந்த மேசைகளைக் கொண்டுவா. இங்கே காற்று மனமகிழ்ச்சியாக இருக்கிறது. விருந் தினர்களோடு சேர்ந்து இன்னும் அதிகமாக மது அருந்துவேன். சீசருடைய தூதர்களுக்கு எல்லாவகையான மரியாதையும் செய்ய வேண்டும்.

மன்னி :

நீங்கள் அவர்களுக்காகவா இங்கே இருக்கிறீர்கள்? அல்ல.

மன்னன் :

ஆம். காற்று மனம் மகிழ வீசுகிறது. எரோதிபாசு வா, விருந்தினர் நமக்காகக் காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆ, கால் நழுவிவிட்டது! குருதியிலே கால் வழுக்கிவிட்டது. இது திக்குறி பெரிய திக்குறி இங்கே குருதி படிந்திருப்பதற்குக் காரணம் என்ன? ... இந்தப் பிணம்... இது யார்? ...விருந்தினர்களுக்கு உணவு அளிக்காமல் பிணத்தைக் காட்டுவானே எகிப்திய மன்னன் அவனைப்போல என்று என்னையும் நினைத்துக் கொண்டார் களா இது யாருடைய உடல்? முதலாவது வீரன் :

அரசே, அவன் நம்முடைய காலவர் தலைவன், மூன்று நாளைக்கு முன்னால் தாங்கள் காவலர்களுக்குத் தலைவனாக அமர்த்திய அதே சிரியா இளைஞன்.

மன்னன் :

நான் அவனுக்குத் சாத்தண்டனை விதிக்கவில்லையே!