பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 சலோம்

இரண்டாவது வீரன் :

தற்கொலை செய்து கொண்டான், மாமன்னா!

மன்னன் :

காரணம் என்ன ? நான் அவனைத் தலைவனாக அமர்த்தி னேனே!

இரண்டாவது வீரன் :

அரசே, எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவன் தற்கொலை செய்து கொண்டான் என்பது மட்டும் தெரியும்.

மன்னன் :

வியப்பாக, இருக்கிறது. உரோமானிய மெய்யறிஞர்கள் மட்டுமே தற்கொலை செய்துகெள்ளுவார்கள் என்று நான் நினைத்தேன். உண்மைதானே, திசெல்லினசு, உரோமானிய அறி ஞர்கள் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள் அல்லவா?

திசெல்லினசு :

ஆம், அரசே! அதுபோல் சிலர் இருக்கிறார்கள், முரடர்கள்.

மன்னன் :

தற்கொலை செய்துகொள்ளுவது எள்ளத் தக்கதாகும்.

திசெல்லினசு :

உரோமானியர்கள் அவர்களைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். மாமன்னர் அவர்களைக் கிண்டல் செய்து ஒரு பாட்டு புனைந்தி ருக்கிறார். அதை எங்கும் பாடுகிறார்கள்.

மன்னன் :

ஆ, பாட்டு புனைந்திருக்கிறாரா? சீசர் அருமையானவர். அவர் எல்லாம் செய்வார் ........... சிரியா இளைஞன் தற்கொலை செய்துகொண்டது வியப்பு. அவன் இறந்துபோனதற்காக நான் வருந்துகிறேன், ஆம் மிகவும் வருந்துகிறேன். அவன் பார்ப்பதற்கு