பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

зжает рабо-Ф 44

மன்னன் :

பழுத்த பழங்கள் கொண்டு வாருங்கள், (பழங்களைக் கொண்டு வருகிறார்கள் வேலைக்காரர்கள்) சலோம், வா, என்னுடன் பழம் சாப்பிடு.... பழத்தில் கொஞ்சம் கடித்துக்கொள் tதியை நான் தின்கிறேன்.

சலோம் :

எனக்குப் பசி இல்லை, அரசே,

மன்னன் :

(மன்னியிடம்) பார்த்தாயா, இவ்வளவு அழகாக வளர்த்தி ருக்கிறாய், உன் மகளை7

மன்னி. :

நானும் என் மகளும் மன்னர் மரபிலே தோன்றியவர்கள்: நீங்களோ? உங்கள் தந்தை ஒட்டகம் ஒட்டிக் கொண்டிருந்தார் அவர் கொள்ளைக்காரருங்கூட.

மன்னன் :

பொய் பொய்1

மன்னி :

நான் சொல்வது உண்மையென்பது உங்களுக்கே தெரியும்

மன்னன் :

சலோம், வா என் பக்கத்தில் உட்கார். உன்னுடைய தாய் உட்காரும் அரியணையை உனக்குத் தருகிறேன்.

சலோம் :

அரசே, எனக்குக் களைப்பு இல்லை.

மன்னி :

உங்களைப்பற்றி அவள் என்ன நினைக்கிறாள், பார்த்தீர்

&©fIIᎢ ?