பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்டு 46

ஒரு யூதன் :

அரசே, அவனை எங்கள் வயம் ஒப்புவித்து விடுவது

நல்லது.

மன்னன் :

போதும், இந்தப் பேச்சு இதற்கு முன்னமே பதில் சொல்லி

இருக்கிறேன். முற்றுணர்ந்தோனை உங்கள் வயம் ஒப்புவிக்க

மாட்டேன். அவன் மேன்மையானவன். அவன் கடவுளைக்

கண்ணால் கண்டவன்.

ஒரு யூதன் :

கண்டிருக்க முடியாது. இலியாசு அறிவனுக்குப் பின்னால் ஆண்டவனைக் கண்டவர்கள் நிலவுலத்தில் இல்லை. இனி, இந்தக் காலத்திலே கடவுள் யாருக்கும் காட்சி அளிப்பதில்லை, அவர் யாருடைய கண்ணிலும் படாமல் மறைந்திருக்கிறார். அத னால், தேயத்திலே மறம் மலிந்திருக்கிறது.

மற்றொரு யூதன் :

உண்மையாகவே இலியாசு பகவானைக் கண்டாரா என்பது ஐயமே. ஒருவேளை அவர் தேவனின் நிழலைக் கண்டிருக்கலாம்.

மூன்றாவது யூதன் :

கடவுள் ஒரு போதும் மறைந்திருப்பதில்லை. எல்லாக் காலத்திலும் எல்லாப் பொருள்களிலும் அவர் தோன்றுகிறார். அவர் நல்ல பொருள்களில் இருப்பதுபோலவே தீயபொருள்க ளிலும் இருக்கிறார்.

நான்காவது யூதன் :

அப்படிச் சொல்லலாமா? அது மிகவும் இடர்ப்பாடான மெய்மை அலெக்சாந்திரிய கல்லூரிகளில் இதுபோன்ற கருத்தைக் கற்பிக்கிறார்கள்.