பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 சலோம்.

ஐந்தாவது யூதன் :

கடவுளின் போக்கை யாரால் சொல்லமுடியும் அது மிகவும் மறைபுதிரானது. நாம் மறம் என்று நினைப்பது அறமாக இருக்கலாம. நாம் அறம் என்று நினைப்பது மறமாக இருக்கலாம். எதைப் பற்றியும் ஒன்றும் தெரியவில்லை. நாம் எல்லா வற்றையும் கடவுளுக்கு அளித்துவிட வேண்டும். ஏனெனில், அவர் மிக்கவல்லவர். வலியவர்களையும் மெலியவர்களையும் ஒரே நிலையில் அழிவு செய்கிறார். அவர் ஒரு மனிதனையும் பொருட்படுத்துவது இல்லை.

ஐந்தாவது யூதன் :

நீர் சொல்லுவது உண்மை. கடவுள் அஞ்சத்தக்கவர். உரலிலே தானியத்தை அரைப்பதுபோல, அவர் வலியவர்க ளையும் மெலியவர்களையும் ஒன்றேபோல் அழிவு செய்கிறார். ஆனால் இவன், இந்த சோகனான், கடவுளைக் கண்டதே இல்லை. இலியாசு அறிவனுக்குப் பின்னால், பகவானைக் கண்ட வர்கள் யாருமே இல்லை. மன்னி :

சரி, பேசாமல் இருங்கள், எனக்குக் களைப்பாக இருக் கிறது. - மன்னன் :

இந்த சோகனான் தான் உங்களுடைய காலனாகிய இலியாசு என்று சொல்லுகிறார்களே! யூதன் :

அது சரியில்லை. அவர் மறைந்து முன்னுறு ஆண்டுக்ள் ஆகிறதே!.

அறிவனுடைய குரல் :

காலம் வந்துவிட்டது. ஆண்டவன் குறித்த காலம் வந்து விட்டது. உலகம் காப்பவன் குன்றங்களிலே நடந்துவரும் ஓசை கேட்கிறது எனக்கு.