பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை தி

&FGam ஒர் ஒற்றையங்க சோக நாடகம். ஐரிஷ் 'கவிஞர் ஆஸ்கார் ஒயில்ட்டு 1891-இல் இந்த நாடகத்தை எழுதினார்; 1893இல் புத்தகமாக வெளிவந்தது.

ஆஸ்கார் ஒயில்ட்டு பிரெஞ்சு மொழியில் இதை எழுதினார்; பாரிஸ் நாடக அரங்கில் நடிக்கப்பட்டபோது, ஏராளமான கூட்டம் வந்தது. பிரெஞ்சுக்காரர்களிடையே இந்த நாடகம் பெரும் புகழ்பெற்றது.

பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்தில் லார்டு ஆல்பிரெட் டக்லஸ் மிக நுட்பமாகவே மொழி பெயர்த்திருக்கிறார். ஒரு மொழி மின்சாரமாகவே சுழல்கிறது, இந்த நாடக நடை: உணர்ச்சிச் சூறாவளியாகவே அமைந்திருக்கிறது. இந்த நாடகப் போக்கு, சலோம் என்ற பெண்ணின் நிகரற்ற அழகும், மோகமும், அரசனின் காம வெறியும், இராணியின் இதயப் புரட்சியும், பெண்மையின் ஆழ்ந்த செளந்தரியத்திலும், லீலையிலும் மதி மயங்கி மடியும் ஆண்களின் மனத்துடிப்பும், இதில் மின்சார வேகத்தில் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. படிக்கவும் நடிக்கவும் ஏற்ற சிறந்த சோக நாடகம் இது. கவிஞன் ஷெல்லி எழுதியிருக்கும் செஞ்சி நாடகம் போன்றது.

பாத்திரங்களின் சோகக்குரல், புகைந்து படர்ந்து நமது உள்ளத்தில், தீயுமிழ்கிறது. ஞானியின் வெட்டிய தலையையே முத்தமிடும் சலோமின் மனப்பான்மை, சோகக் கலையின் இதயத்தில் ஓர் ஓங்கிய சிலையாகவே மின்னிக் கொண்டிருக்கும்.

கவிஞர். த. கோவேந்தன், மூலத்தின் ஒளி மங்காமல் இனிய எளிய சரளமான தமிழில் மொழி பெயர்த்துத் தந்திருக்கிறார். எல்லோரும் படித்து இன்புறுவோமாக.

21.6.64 வி.ஆர்.எம்.செட்டியார்