பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 சலோம்

மன்னன் :

இது எனக்குப் பிடிக்கவில்லை. செத்தவர்களைப் பிழைக்க வைப்பதைத் தடுக்கிறேன். இதை அவனிடம் சொல்லிவிடுங்கள். இப்போது அவன் எங்கே இருக்கிறான்? இரண்டாவது நாசரீன் :

அரசே, எங்கும் எல்லா இடங்களிலும் அவன் இருக்கிறான். அவனைக் கண்டுபிடிப்பது தொல்லை.

முதல் நாசரின் :

அவன் இப்போது சமாரியாவில் இருக்கிறானாம்.

ஒரு யூதன் :

அவன் சமாரியாவில் இருந்தால், அவன் தேவதூதன்

அல்லன். சமாரியர்கள் சாவிப்பிற்கு உள்ளானவர்கள். அவர்கள்

திருக்கோயிகள்களுக்குக் காணிக்கை செலுத்துவது இல்லை.

இரண்டாவது நாசரீன் :

சில நாள்களுக்கு முன்னால், சமாரியாவிலிருந்த ஏதோ ஒர் ஊருக்குப் போனான். இப்போது செருசலேம் நகரத்திற்கு அருகில் இருக்கலாம். முதல் நாசரீன் :

இல்லை, அவன் அங்கே இல்லை, நான் இப்போதுதான் செருசலேமிலிருந்து வந்தேன். இரண்டுமாத காலமாக அவனைப் பற்றி யாதொரு தகவலும் இல்லை.

மன்னன் :

குற்றம் இல்லை, எங்கிருந்தாலும் சரி, கண்டுபிடியுங்கள், கண்டுபிடித்துச் செத்தவர்களை எழுப்பக்கூடாதென்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள். நீரை மதுவாக மாற்றவது, குருடர் களுக்குப் பார்வை அளிப்பது.... இதைப்பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. அவன் விருப்பம்போலச் செய்துகொள்