பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்டு - 56

மன்னன் :

சலோம், எரோதியாசு மகளே, எனக்காகக் கொஞ்ச நேரம்

நடனமாடு.

மன்னி :

பேசாமலிருங்கள். அவளை விட்டுவிடுங்கள்.

மன்னன் :

சலோம், நீ நடனமாட வேண்டும், எனது ஆணை இது.

சலோம் :

முடியாது அரசே!

மன்னி :

(சிரித்துக்கொண்டே) பார்த்தீர்களா, உங்கள் ஆணைக்கு அவள் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறாள் என்று.

மன்னன் :

சரி, அவன் நடனமாடினால் என்ன, ஆடாவிட்டால் என்ன? இன்றிரவு நான் பெருங்களிப்பாய் இருக்கிறேன், மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறேன். இதுபோல ஒருமுறை கூட இதற் குமுன் உவகையாக இருந்தது இல்லை. முதல் வீரன் :

மன்னன் முகத்திலே கவலைக்குறி தோன்றுகிறது அல்லவா!

இரண்டாவது வீரன் :

ஆம்.

மன்னன் :

நிலவுலகின் தலைவனையும் எல்லாப் பொருள்களின் இறைவனுமாகிய சீசர் பெருமான் என்னை மனமார விரும்புறார்.